நிதி மோசடி விசாரணைப் பிரிவு விரைவில் மூடப்படும் சாத்தியம்...!

நிதி மோசடி விசாரணைப் பிரிவு விரைவில் மூடப்படும் சாத்தியம் காணப்படுவதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நிதி மோசடி விசாரணைப் பிரிவின் சிவில் உறுப்பினர்களின் அடையாள அட்டைகள் ஏப்ரல் 8 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இவர்களது அடையாள அட்டையின் நீடிப்பு காலம் ஜுன் 30 வரை மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களது அடையாள அட்டை நீடிப்புக்காலம் நிறைவுபெறும் பட்சத்தில் இவர்களது சேவை நடவடிக்கைகளை முன்னெடுப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

குறித்த சிவில் அதிகாரிகளே நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு மக்களிடமிருந்து கிடைக்க பெரும் ஊழல் மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைசெய்து பொலிஸ் மா அதிபருக்கு விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்கின்றனர்.

இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட 70 விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேசரி 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -