![]() |
அடையாளப்படம் |
அம்பாறை பாலமுனை பிரதான வீதியில் இடம்பெற்ற லொறி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.
பாலமுனை மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக வீதியை கடக்க முற்பட்டவரை அக்கரைப்பற்றுப் பிரதேசத்திலிருந்து கல்முனைப் பிரதேசம் நோக்கிச்சென்று கொண்டிருந்த லொறி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பாலமுனை நான்காம் பிரிவைச் சேர்ந்த 48 வயதுடைய ஏ.எல்.வஹாப்தீன் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
மேலும் விபத்துடன் சம்மந்தப்பட்ட லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.