லிந்துலை மெராயாவில் மண்சரிவு - 27 பேர் பாதிப்பு

க.கிஷாந்தன்-
லையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினால் பல பிரதேசங்களில் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக இயற்கை அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மண்சரிவு ஏற்படக் கூடிய பிரதேசங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெய்த அடை மழை காரணமாக 28.05.2016 அன்று அதிகாலை 3 மணியளவில் லிந்துலை காவற்துறை பிரிவிற்குட்பட்ட மெராயா தங்ககலை கேம்பிரி மேற்பிரிவு தோட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

குறிப்பாக பின்புரத்தில் உள்ள சமையல் அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு, அதிலிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்குடியிருப்பு பகுதியில் பின் புரத்தில் இருந்த பாரிய மண்மேடே சரிந்து விழுந்துள்ளது. இதில் இரண்டு வீடுகளிலும் இருந்த 6 குடும்பங்களை சேர்ந்த 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த லய குடியிருப்பு தொகுதியில் 20 வீடுகள் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளதாகவும் இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் 100 பேர் நிர்க்கதிக்குள்ளாகும் நிலை ஏற்படும் என இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அத்தோடு மேற்படி பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களை சேர்ந்த 27 பேரை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கும், நிவாரண உதவிகளை பெற்றுப்கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தோட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -