கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் 129 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி...!

எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனை றினோன் விளையாட்டுக் கழகம் நடாத்தும் பறக்கத் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்றில் கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் 129 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற்ற 20 : 20 ஓவர் போட்டி வரலாற்றில் அணி ஒன்று பெற்ற அதி கூடிய (254) ஓட்டங்கள் இதுவாகும்.

கடந்த (23) கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்இஸ்லாமாபாத் யங்மவுண்ட் விளையாட்டுக் கழகமும் கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகமும் மோதியிருந்தன.

முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்கள் முடிவில் 3விக்கட் இழப்புக்கு 254 ஓட்டங்களைப் பெற்றது. இதில் எம்.எஸ்.அஸ்பர் 36 பந்துகளுக்கு 13 சிக்ஸர்கள் அடங்கலாக 106 ஓட்டங்களை ஆட்டமிழக்காமலும், எம்.சி.ஹாறுன் 37 பந்துகளுக்கு 75 ஓட்டங்களை ஆட்டமிழக்காமலும் பெற்று அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இஸ்லாமாபாத் யங்மவுண்ட் விளையாட்டுக் கழகம் 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி கண்டது.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது கல்முனை விக்டோறியஸ் கழகத்தின் எம்.எஸ்.அஸ்பர் (36பந்துகளுக்கு 13 சிக்ஸர்கள் அடங்கலாக 106 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல்) பெற்றமைக்காக வழங்கிவைக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -