தேசிய தலைவருக்கான போட்டி ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமானது – இம்ரான் MP

தேசிய தலைவர் போட்டி ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமானது என தெரிவித்தார் ஐக்கிய தேசிய கட்சி திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் இன்று ஞாயிற்றுகிழமை மூதூரில் இடம்பெற்ற மூதூர் பிரதேசத்துக்கான உயர்பீட தெரிவின் போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்

ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களாகிய உங்களின் தியாகங்களின் மூலமாகவே இந்தஆட்சிமாற்றம் ஏற்பட்டது ஆனால் இந்த ஆட்சிமாற்றத்தின் பயனை நாம் முழுமையாக அனுபவிக்கின்றோமா என கேட்டால் இல்லை என்றே கூற வேண்டும் மஹிந்த அரசாங்கம் அதிகாரத்தின் உச்சத்தில் காணப்பட்ட வேளை அவ்வரசுக்கெதிராக பல மிரட்டல்களுக்கும் உயிரச்சுருத்தல்களுக்கும் மத்தியில் பிரசாரங்களை மேற்கொண்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியது ஐக்கியதேசிய கட்சி ஆதரவாளர்களாகிய நாமே

ஆனால் ஆட்சிமாற்றத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னால் வந்து சேர்ந்தவர்கள் ஆட்சிமாற்றத்துக்கு உரிமைகூறி அதன் பயனை அனுபவிக்கிறார்கள் ஏன் ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களில் அரசாங்கத்தை விமர்சித்து மஹிந்தவை ஆட்சிபீடம் ஏற்ற முற்பட்டவர்கள் இன்று அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் இதனால் எமது கட்சி ஆதரவாளர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டு வருவதை யாராலும் மறுக்க முடியாது.நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த நல்லாட்சி அரசொன்றை அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால் நாம் தொடர்ந்தும் தியாகம் செய்து வருகின்றோம்

இதற்கான ஒரே தீர்வு ஐக்கியதேசிய கட்சியின் தனி அரசொன்றை அமைப்பதாகும் இதனை இலக்காக கொண்டே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் கட்சி மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன ஐக்கிய தேசிய கட்சியின் இளம் தலைவர்களுக்கு கட்சியின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன சிரேஸ்ட தலைவர்களின் வழிகாட்டலில் கிராம மடத்திலிருந்து கட்சி மறுசீரமைக்கப்பட்டு கட்சியை பலப்படுத்தப்படும் இதன்மூலம் கட்சி ஆரம்பித்ததிலிருந்து 1994ஆம் ஆண்டுவரை பலதலைவர்களை இழந்து நாட்டுக்கு சேவையாற்றிவரும் ஐக்கிய தேசிய கட்சியின் இளம் தலைவர்கள் உருவாக்காப்படுவார்கள்

அத்தோடு முன்னர் இங்கு உரையாற்றிய சகோதரர் கூறியதை போல அரச திணைக்களங்களில் பணிபுரியும் பல அதிகாரிகள் எமது வேண்டுகோளுக்கு உரிய பதில் அளிப்பதில்லை என இதற்கு முக்கியமான காரணம் ஆட்சி மட்டுமே மாறியிருக்கிறது ஆனால் அதிகாரிகள் யாரும் மாறவில்லை பல மஹிந்த ஆதரவாளர்கள் இன்னும் அவருக்கான விசுவாசத்தை காட்டுவதே.

அத்தோடு எமது மகாணத்தை பொறுத்தவரை முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கே ஓங்கியிருக்கிறது மகானசபைக்கு உட்பட்ட திணைக்களங்களில் அவர்களின் ஆதரவாளர்கள் கடமையாற்றுவதாகும் சில வேளைகளில் மாகாணசபையின் செயற்பாடுகள் பாராளுமன்ற மன்றத்தை மதிக்காத நிலை நாட்டின் பல பகுதிகளில் காணப்படுகிறது இதனை தடுப்பதற்கான சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன

இருந்தாலும் கிழக்குமாகான சபையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை ஏற்படுத்துவதன் மூலமே இதற்கான நிரந்தர தீர்வை பெற முடியும் தற்போதைய சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமான நிலையே காணப்படுகிறது இங்கு தேசிய தலைவர் என்ற நாமத்துக்கு இருவர் முட்டிமோதிக்கொள்கின்றனர் ஒருவர் மாநாடு நடத்துகிறார் மற்றவர் பாராளுமன்ற உறுப்பினர்களோடு வந்து வாக்குறுதிகளை அள்ளிவீசுகிறார்.ஆகவே விரைவில் கிழக்கு மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சியின் கட்டுபாட்டுக்குள் வரும்

சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகளை கொண்டு நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என தெற்கில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர் யுத்தம் முடிந்த நாடு ஒன்றில் ஆயுதங்கள் மீட்கப்படுவது வழமையான நிகழ்வு சென்ற ஆட்சிகாலத்தில் பல பகுதிகளில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன அப்போது இல்லாத பாதுகாப்பு அச்சுறுத்தல் இப்போது மட்டும் எவ்வாறு ஏற்பட்டது இவர்களுக்கு. ஆனால் யுத்தத்தின் பின் மீட்கப்பட்ட புலிகளின் தங்கம் எங்கே என கேட்டால் விடை கூற யாருமில்லை

அண்மையில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக முறைப்பாடு செய்ய ஜெனீவா சென்றார்கள் அவர்களது ஆட்சிகாலம் முழுவதும் ஜெனீவாவை தூற்றியவர்கள் இன்று ஜெனீவா சென்று வெள்ளையர்களின் காலில் மண்டியிட்டுள்ளனர்.

இவர்களின் கோமாளித்தனத்தை இனியாவது விட்டுவிட்டு மக்களுக்கு சேவையாற்றுமாறு இவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன் அண்மையில் வெளிவந்துள்ள பனாமாவில் வரிஏய்ப்பு செய்த பிரபலங்களின் பட்டியலில் இலங்கை அரசியல்வாதிகள் இருவரின் பெயர் இடம்பெற்றுள்ளதாக அறியக்கிடைத்தது இவ்வாறான குற்றசாட்டுகளில் இருந்து தப்பிக்கவே ஆட்சிமாற்றத்தை ஏற்படுவோம் என கூறி சிலர் மக்கள் முன் கோமாளிகளாக காட்சியளிக்கின்றனர்

இவர்கள் எவ்வாறான சதித்திட்டங்களை தீட்டினாலும் நல்லாட்சியையும் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள ஐக்கியதேசிய கட்சியின் ஆட்சியையும் இவர்களால் தடுக்கமுடியாது எனக் கூறினார்.

ஊடகப்பிரிவு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -