அல்ஹாஜ் M.H. முஹம்மட் அவர்களுடைய மறைவு மிகப் பெரிய பேரிழப்பாகும் -ஹிஸ்புள்ளா

ல்ஹாஜ் M.H. முஹம்மட் அவர்களுடைய மறைவு குறிப்பாக முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவகையிலே மிகப் பெரிய பேரிழப்பாகும்.

முஸ்லிம் சமூகத்திற்காக தன்னுனைய மிகச் சிறிய வயதிலிருந்து மிகப் பாரிய சேவைகளை சமூகத்திற்காகவும்,மார்க்க விடயங்களுக்காகவும் ஆற்றிய ஒரு மிகப் பெரிய ஒரு தலைமைத்துவத்தை நாம் இன்று இழந்திருக்கின்றோம்.

நூற்றுக்கணக்கான பள்ளிவாயல்கள்,மதரஸாக்கள்,நிறுவனங்களை உருவாக்கி இலங்கையிலே வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல ஏனைய சமூகங்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையிலே ஒரு புரிந்துணர்வை,ஒற்றுமையை ஏற்படுத்துகின்ற மிகப் பெரும் பாலமாக எங்களுடைய மறைந்த தலைவர் அல்ஹாஜ் M.H. முஹம்மட் அவர்கள் திகழ்ந்தார்கள்.


அவர்கள் தன்னுடைய இறுதி மூச்சு வரையும் முஸ்லீம் சமூகத்திற்காக மிகப் பெரும் பணியாற்றியவர்கள். குறிப்பாக இன்று உலகம் முழுவதும் உலக முஸ்லீம்களுக்காக பணிபுரிகின்ற "றாபியதுல் ஆலமி இஸ்லாமி"என்ற நிறுவனத்தை உருவாக்கிய ஆரம்பகால 11 உறுப்பினர்களில் 10 பேர் இது வரை மரணித்து இவர் மாத்திரம் இறுதியாக உயிரோடு இருந்த ஸ்தாபக அங்கத்தவர். இன்றுடன் அதை உருவாக்கிய 11 பேரும் மறைந்து விட்டார்கள்.

அவ்வாறு உலகம் முழுவதும் பணியாற்றிய மிகப் பெரிய நிறுவனத்தை உருவாக்கிய பாக்கியத்தை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருந்தான். அல்லாஹ் அவர்களின் நல்லமல்களை அங்கீகரித்து அவர்களின் கப்றை சுவர்க்கப் பூஞ்சோலையாக ஆக்குவேண்டும் என நாம் எல்லோரும் பிரார்த்திப்போமாக.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -