முஸ்லிம் உலமா கட்சியும் உழைப்பாளர் ஐக்கிய முன்னணியும் இணைந்து இம்முறை மே தின நிகழ்ச்சிகளை பொத்துவிலில் நடத்தவுள்ளதாக உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
உழைக்கும் மக்களின் வாழ்வுரிமைக்காகவே மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டில் குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் உழைக்கும் மக்கள் அரசியல்வாதிகளால் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். தேர்தல் காலங்களில் அவர்களின் வாக்குகளைப்பெற்று பிரதிநிதியான பின் அம்மக்களை தமது கால்களின் கீழ் போட்டு நசுக்கும் நிலையை காண்கிறோம்.
எனவேதான் உழைக்கும் மக்களை விழிப்பூட்டுவதற்காக இம்முறை உலமா கட்சி உழைப்பாளர் ஐக்கிய முன்னணியுடன் இணைந்து பொத்துவில் அறுகம்பே வீதியில் ஏ.பி இஸற் ஜமீல் அவர்களின் தலைமையில் நடாத்தவுள்ளது.