எகிப்து மற்றும் சவுதியை தரைவழியாக இணைக்க “கிங் சல்மான் பாலம்” உதயம்...!

வுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளை தரைவழியாக இணைக்கும் பாலம் ஒன்றை அமைக்க இரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன.

இதற்கு கிங் சல்மான் பாலம் என பெயரிடப்பட்டுள்ளது.

சுமார் 20 நிமிடங்களில் எகிப்தில் இருந்து சவுதி வந்தடைய முடியுமான மேற்படி பாலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான உயிர் நாடியாக கருதப்படும் அதேவேளை, செங்கடல் ஊடாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்கள் இடையே கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து, சுற்றுலா உள்ளிட்ட மாபெரும் வர்த்தக வாய்ப்புகளை இணைக்கும் ஒரு பெரிய திட்டம் எனவும் கருதப்படுகிறது.

மன்னர் சல்மான் தற்போது மேற்கொண்டுள்ள எகிப்துக்கான விஜயத்தின் போது, இந்த திட்டத்தை அமைப்பதற்கான உடன்படிக்கையில் இருநாடுகளும் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதே வேலை ரியத் மற்றும் கெய்ரோ இடையே 60 பில்லியன் ரியால்கள் மதிப்புள்ள முதலீட்டு நிதியம் ஒன்றை அமைத்தல், எகிப்தில் பொருளாதார வர்த்தக வளையம் ஒன்றை அமைத்தல் உள்ளிட்ட 21 ஒப்பதங்களில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளதாக சவுதி செய்திகள் தெரிவிக்கின்றன.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -