முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மறைந்து 21 வருடங்களின் பின் அவா் நாடு முழுவதிலும் ஆரம்பித்து வைத்த உதா கம்மான (கிராம எழுச்சி) மீண்டும் நாடு முழுவதும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது அதில் முதலாவது உதா கம்மான கிராமம் நாளை (11.04.2016) முல்லைத்தீவு வெலிஓயா பிரதேச செயலாளா் பிரிவில் சம்பத் நுவர ”இசுருபுர” எனும் கிராமம் மக்களிடம் கையளிக்கப்படும்.
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவின் பணிப்புரையின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை இவ் வீடமைப்புக் கிராமததினை நிர்மாணித்துள்ளது.
இக் கிராமம் 25 வீடுகள் கொண்டது. இதில் வீடுகளை நிர்மாணிக்க வென முல்லைத்தீவு வீடமைப்பு மாவட்டக் காரியலயம் ஊடாக 2இரண்டு இலட்சத்து 50ஆயிரம் ருபாவை வீடமைப்புக் கடனாக வழங்கியுள்ளது. அத்துடன் காணி, பாதை நீர் போன்ற அடிப்படை வசதிகளும் இங்கு செய்து கொடுக்க்பபட்டு்ள்ளது.