கம்பஹா மாவட்டம், அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் உள்ள ஒகடபொல பிரதேசத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களது நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்ற சமையல் மற்றும் தையல் பாடநெறிகளைப் பூர்த்தி செய்த பெண்களின் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 09-04-2016 ஓகொடபொல அமானா பெண்கள் அமைப்பின் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மேல்மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம், நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் இஹ்சான் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கஹட்டோவிட்ட ரிஹ்மி.