சிலாவத்துறை பண்டாரவெளி அல் முனவ்வர் இளைஞர் கழகத்திற்கான கிரிக்கெட் விளையாட்டு சீருடையும் ஒரு தொகை பணமும் இன்று வடமாகான சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்களால் அல்-முனவ்வர் இளைஞர் கழகத்தின் தலைவரிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வானது இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனின் தம்பியும் வடமாகான சபை உறுப்பினருமான ரிப்கான் பதியுதீன் அவர்களின் காரியாலயத்தில் வைத்து கழகத் தலைவர் அன்பர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வின்போது சிலாவத்துறை பண்டாரவெளி அல் முனவ்வர் இளைஞர் கழகத்தின் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் பலரும் கழந்து கொண்டனர்.


