அட்டாளைச்சேனை கல்லூரியில் இடை நிறுத்தப்பட்ட கற்கை நெறியினை மீண்டும் ஆரம்பிக்க கோரிக்கை..!

சலீம் றமீஸ்-
ட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் இடை நிறுத்தப்பட்ட உடற்கல்வி பயிலுனர் மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிலுனர் ஆசிரியர்களுக்கான கற்கை நெறியினை மீண்டும் ஆரம்பிக்க கிழக்கு மாகாண சபை கோரிக்கை! 

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் இடை நிறுத்தப்பட்ட உடற்கல்வி பயிலுனர் ஆசிரியர் மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிலுனர் ஆசிரியர்களுக்கான கற்கை நெறியினை மீண்டும் ஆரம்பிக்குமாறு மத்திய கல்வி அமைச்சரிடம் கிழக்கு மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பையினால் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை ஏற்றுக் கொண்ட கிழக்கு மாகாண சபை மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது, அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் சென்ற 1994 ம் ஆண்டில் இருந்து 2010 ஆண்டு வரை உடற்கல்வி பயிலுனர் ஆசிரியர்களுக்கான கற்கை நெறி வழங்கப்பட்டு 224 ஆசிரியர்கள் கற்கை நெறியினை பூர்த்தி செய்து வெளியேறி உள்ளனர். 

இதே போல் தகவல் தொழில்நுட்ப பயிலுனர் ஆசிரியர்களுக்கான கற்கை நெறி 2006 ல் இருந்து 2010 ஆண்டு வரை வழங்கப்பட்டு 31 ஆசிரியர்கள் தங்களின் கற்கை நெறியினை பூர்த்தி செய்து வெளியேறி உள்ளனர். இந்நிலையில் கடந்த 2010 ம் ஆண்டில் இருந்து அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியில் உடற்கல்வி பயிலுனர் ஆசிரியர்களுக்கான கற்கை நெறியும், தகவல் தொழில்நுட்ப பயிலுனர் ஆசிரியர்களுக்கான கற்கை நெறியும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இவ் இரண்டு கற்கை நெறிகளும் இடை நிறுத்தப்பட்டதனால் இத்துறைகளில் தகைமையுள்ள பயிலுனர் ஆசிரியர்களுக்கு கல்வி கல்லூரிக்கு சென்று இது தொடர்பான கற்கை நெறியினை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. குறிப்பாக விளையாட்டு துறையில் உடற்கல்வி விரிவுரையாளருக்கான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போனதுடன் பாடசாலைகளில் உடற்கல்வி ஆசிரியர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய முடியாத நிலைமையும்ஏற்பட்டுள்ளது.

எனவே, அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியில் இடை நிறுத்தப்பட்ட உடற்கல்வி கற்கை நெறியும், தகவல் தொழில்நுட்ப கற்கை நெறியினையும் மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசாங்க கல்வி அமைச்சரிடம் கிழக்கு மாகாண சபை கோரிக்கை விடவேண்டும் என்ற பிரேரணையே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களினால் சமர்ப்பிக்கப்படட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -