சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் நுகர்வோர் உரிமைகள் முழுமையாக மீறப்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமையை பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் நுகர்வோருக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைர் ரஞ்ஜத் விதானகே தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் உரிமை மீறப்பட்டமைக்கான பொறுப்பை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு ஏற்க வேண்டும் என அவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
சித்திரை புத்தாண்டு அல்லது வோறொரு பண்டிகைகள் காலப் பகுதியில் நுகர்வோரை தெளிவூட்டுவதற்காக பல்வேறு சேவைகள் நடைமுறைப்படுத்துவதற்கு அல்லது ஊடகங்களின் ஊடாக நுகர்வோர் தெளிவூட்டுவதற்கு நுகர்வோர் அதிகார சபை இதற்கு முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தது.
எனினும், தனது தனிப்பட்ட அனுமதியின்றி ஊடகங்களில் எவ்வித பிரசாரங்களும் மேற்கொள்ள கூடாது என நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனால் நுகர்வோரை தெளிவூட்டும் நடவடிக்கையை இம்முறை நடைமுறைப்படுத்தவில்லை என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலைமையில், நுகர்வோர் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்புவதற்கும் ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
