களுத்துறை மாவட்டம் மத்துகம பள்ளேகொட மேற்பிரிவில் நேற்று இடம்பெற்ற தீவிபத்து அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் பாடசாலையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு தற்காலிகக் கூடாரங்களை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் மூன்று மாத காலத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக புதிதாக தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.


