ஜம்இய்யதுத் தர்பிய்யத்தில் இஸ்லாமியாவினால் அதன் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான ஈமானிய எழுச்சி மாநாடு நேற்று (2016.04.15) வெள்ளிக்கிழமை; அமைப்பின் தலைவர் அஷ்ஷேஹ் எம்.ஏ.முபீன்; (ஸஹ்வி) தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுவர்க்கத்தை நோக்கிய இலட்சியப் பயணத்தில் ஈமானை புதுப்பித்துக்கொள்வோம் என்கின்ற தலைப்பில் தாருல் ஹூதா பெண்கள் அரபுக்கல்லூரியின் அதிபர் அஷ்ஷேஹ் கலாநிதி முபாறக் மதனி உரை நிகழ்த்தியதோடு பெருந்திரளான பெண்கள்; இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்விற்கு ஜம்இய்யத்துஸ் ஸபாப் அனுசரனை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

