பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ட்ரோமிற்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை(26) முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் தனது விஜயத்தின் ஓரங்கமாக இன்று காலை யாழ்ப்பாணத்திற்குச் சென்றதுடன் யாழ் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.