கிழக்குமாகாண சபை அமர்வு ஒரு மணிநேரம் ஒத்திவைப்பு காரணம் இதுதான்...!

றிசாத் ஏ காதர்-
2016.04.26ஆம் திகதி இன்று கிழக்கு மாகாண சபையின் 57வது சபை அமர்வு தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் திருகோணமலை மாகாண சபையில் கூடியது. 

சபை அமர்விற்கு ஆளும் கட்சி சார்பாக கிழக்குமாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் உட்பட ஐந்து (05) உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.

எதிர்க்கட்சி சார்பாக முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை உட்பட மூன்று (03) உறுப்பினர்கள் மாத்திரமே வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

37உறுப்பினர்களை கொண்ட கிழக்கு மாகாண சபையில் 08உறுப்பினர்கள் மாத்திரம் கலந்து கொண்டமையினால் தவிசாளர் சபையினை ஒரு மணிநேரம் ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -