வெளிநாட்டிலிருந்து வந்த தாய்க்கும் மகனிற்கு இலங்கையில் காத்திருந்த சோகம்...!

புத்தாண்டை கொண்டாட வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தாயும் மகனும் ரயில் விபத்தில் பலி!

அம்­ப­லாங்­கொட, ரயில் கட­வையில் நேற்று முன்­தினம் மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று ரயி­லுடன் மோதுண்டு விபத்­துக்­குள்­ளா­னதில் தாயும் மகனும் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

ரயில் கட­வை காவ­லா­ளியின் ஆணையை மீறி ரயில் வரு­வதை அவ­தா­னித்து கொண்டே குறித்த பெண் கட­வையின் ஊடாக மோட்டார் சைக்­கிளை செலுத்த முற்­பட்­ட­போது மாத்­த­றை­யி­லி­ருந்து கொழும்பு நோக்கி பய­ணித்து கொண்­டி­ருந்த கடு­கதி ரயிலால் மோதுண்டு விபத்­துக்­குள்­ளாகி உயி­ரி­ழந்­துள்­ளனர் என தெரி­ய­ வந்­துள்­ளது.

சம்­ப­வத்தில் உத­யங்­கனி கோமஸ் என்ற 28 வய­தான பெண்ணும் சமித் என்ற 6 வய­தான அவ­ரது மக­னுமே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவர்கள் வெளி­நா­டொன்றில் வசித்து வந்­தி­ருந்த நிலையில் புத்­தாண்டை முன்­னிட்டு இலங்கை வந்­துள்­ளனர் எனவும் புத்­தாண்­டுக்­காக ஆடைகள் வாங்­கு­வ­தற்­காக சென்று கொண்­டி­ருந்த போதே இவ்­வி­பத்து இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

உயி­ரி­ழந்த பெண்ணின் கணவர் இலங்கை வரு­வ­தற்­காக புறப்­பட்டு விமா­னத்தில் வந்து கொண்­டி­ருந்த வேளையில் இவ்­வி­பத்து இடம்­பெற்­றுள்­ள­துடன் அவர் இலங்கையை வந்தடையும் வரை தனது மனைவியும் மகனும் உயிரிழந்தமை தொடர்பில் அறிந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -