18 மாதங்களில் 108 கிலோ எடையை குறைத்து அசத்திய அம்பானியின் மகன்...!

முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி கடந்த 18 மாதங்களில் தனது உடல் எடையில் 108 கிலோ எடையை குறைத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதற்காக அவர் பல கடும் முயற்சி மேற்கொண்டார். தினமும் 21 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்ட அவர், அத்துடன் சேர்த்து யோகா, உடற்பயிற்சிகளை தனது அன்றாடை வாழ்க்கையில் கடைபிடித்துள்ளார். மேலும் தனது உணவு பழக்கவழக்கங்களிலும் சில மாற்றத்தை கொண்டுவந்த அவர் கொழுப்புசத்து இல்லாத உணவு வகைகளையே உட்கொண்டுள்ளார்.

நாள்பட்ட ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட அவர், அந்நோய்க்காக எடுத்துக்கொண்ட மருத்துவத்தின் காரணமாக உடல் எடை அதிகப்படியாக அதிகரித்தது. இந்நிலையில் தனது 21-வது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு முன்னதாக தனது உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என எண்ணி அதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்துள்ளார்.

இந்த உடல் எடை குறைப்பு முற்றிலும் இயற்கை முறையில் எட்டப்பட்டது எனவும் இதனால் அவருக்கு எந்தவித பக்கவிளைவும் ஏற்படாது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது மகனின் முயற்சியால் நீட்டா அம்பானி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -