காத்தான்குடி ஜாமிஉழ்ழாபிரீன் பெரிய மீரா ஜும்மா பள்ளிவாயல் உப-தலைவராக கைதுரூஸ் ஜேபி தெரிவு

பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட ஏ.எம்.எச். கைதுரூஸ் ஜேபி காத்தான்குடி-05 ஜாமிஉழ்ழாபிரீன் பெரிய மீரா ஜும்மா பள்ளிவாயலின் புதிய உப-தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஜாமிஉழ்ழாபிரீன் பெரிய மீரா ஜும்மா பள்ளிவாயலின் புதிய நிருவாக சபை தெரிவின் போதே அவர் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தற்போது ஹய் பௌண்டேஷனின் தலைவராகவும்,காத்தான்குடி ஸ்மாட் சிட்டி லயன்ஸ் கழகத்தின் செயலாளராகவும் ,சன்றைஸ் விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட ஆலோசகராகவும் இற்றை வரை சிறப்பாக கடமையாற்றிவரும் இவர் சிறந்த சமூக சேவையாளரும்,முன்னாள் காத்தான்குடி பட்டின சபை உப தவிசாளரும்,சமாதான நீதவானும்,சமூக சேவையாளருமான எம்.பீ.எம்.அப்துல் மஜீட் மற்றும் மர்ஹூமா ஹலீமா பீவி ஆகியோரின் புத்திரருமாவார்.

30-06-1662ம் ஆண்டு பிறந்த இவர் காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலயம்,மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி ,அனுராதபுரம் ஸாஹிறா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -