பஷில் மற்றும் பிரதமர் ரணில் பேச்சுவார்த்தை - இரகசியம் அம்பலம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கும் இடையில் இரகசிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கடந்த காலங்களில் ஊடகங்கள் ஊடாக செய்தி வந்தபோதும் அங்கு பேசப்பட்ட விடயங்கள் குறித்து எதுவும் வௌிவரவில்லை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இடையில் அதிகாரபூர்வமற்ற சந்திப்பொன்று கடந்த நாட்களில் இடம்பெற்றது. அங்கு முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தகவல்கள் கிடைத்துள்ளதோடு சந்திப்பின் இரகசியம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக ஒழிப்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு அவசியமென கருதப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையயை இல்லாதொழிப்பதற்கு தேவையான வேலைத்திட்டங்கள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யோசனையையும் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் முன்னிலையாகாமை, பொதுத் தேர்தலின் போது பிரதமர் பதவியை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் பெறாமை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவு படுத்தல் போன்றவை முன்னாள் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும் என்பதோடு மேலும் வெற்றியை ரணில் விக்கிரமசிங்கவிற்கு பெற்றுக் கொடுக்க சந்தர்ப்பம் ஏற்படுத்துவதே ராஜபக்ஷவின் எதிர்பார்ப்பு என்றும் தெரியவருகிறது.

மேலும் இவற்றுக்கு பதிலாக ராஜபக்ஷ குடும்பத்தினர் தொடர்பில் ஏற்பட்டுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை பெறுதல், நாமல் ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷவின் எதிர்கால அரசியலை பாதுகாத்து கொள்வது தொடர்பில் ராஜபக்ஷ குடும்பத்தினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது தொடர்பில் தற்போதைய அரசியலமைப்பின் படி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறவும் மக்கள் வாக்கெடுப்பு நடத்த ஜனாதிபதிக்கும் அதிகாரம் உண்டு.tw
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -