சுலைமான் றாபி-
நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல விளையாட்டு வீரர் அஸ்லம் சஜா, ஈரானில் நடைபெறும் 4வது ஆசிய கனிஷ்ட கபடி சுற்றுப் போட்டியில் இலங்கை தேசிய கபடி அணியை பிரதிநிதிதுவப்படுத்தி ஈரான் நாட்டுக்கு பயணமாகியுள்ளார்.
இம்மாதம் 12ம் திகதி முதல் எதிர்வரும் 17ம் திகதி வரை ஈரானில் இடம்பெறும் மேற்படி கபடி போட்டியில் 13 பேர் உள்ளடங்கிய இலங்கைக் குழுவில் ஒரே ஒரு முஸ்லிம் வீரரார இடம்பெற்றுள்ளதோடு இதன் மூலம் கிழக்கு மாகாணத்திற்கும், அம்பாறை மாவட்டத்திற்கும், தனது சொந்த ஊரான நிந்தவூரிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதேவேளை நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகமானது தனது கழக வீரர்களை கபடி, கரப்பந்து, மெய்வல்லுனர் போன்ற துறைகளில் பிரகாசிக்கச் செய்வதோடு அவர்களின் திறமைகளை சர்வதேச ரீதியிலும் கொண்டு சென்றுள்ளது. அந்த வகையில் இவ்விளையாட்டுக் கழகன் சார்பாக அண்மையில் 03 வீரர்கள் வெளிநாட்டில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து சிறப்பித்ததாக நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், உடற்கல்வி ஆசிரியருமான ஏ.எம்.அன்சார் தெரிவித்தார்.
