காரைதீவில் சுவாமி விபுலானந்த சிலையை அமைச்சர் சுவாமிநாதன் திறந்து வைப்பு - படங்கள்காரைதீவு நிருபர் சகா

லகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாருக்கு சித்ராபௌர்ணமி தினமான நேற்று வியாழக்கிழமை அவர்பிறந்த காரைதீவு மண்ணில் விபுலானந்த சதுக்கத்தில் 'அரோகரா' கோசம் முழங்க உணர்வுபூர்வமாக திருவுருவச்சிலை திறந்துவைக்கப்பட்டது..

அடிகளார் சிவபதமடைந்து 69வருடங்களின் பின்னர் நேற்று காரைதீவின் பிரதான முச்சந்தியில் அதாவது விபுலாநந்த சதுக்கத்தில் நிருமாணிக்கப்பட்ட அழகான திருவுருவச்சிலையை காலை 10.30மணியளவில் இந்துமத அலுவல்கள் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திறந்துவைத்தார்.

சுவாமியின் வெள்ளைநிற மல்லிகையோ.. என்ற பாடலும் இசைக்கப்பட்டது. முன்னதாக காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனாலத்திலும் அரசடிப்பிள்ளையார்
ஆலயத்திலும் விசேட சிறப்புப்பூஜைகள் இடம்பெற்றன. அவற்றிலும் அமைச்சர் சுவாமிநாதன் உள்ளிட்ட அனைத்து அதிதிகளும் கலந்துகொண்டனர். ஆன்மீக அதிதிகளாக இராமகிருஸ்ணமிசன் மட்டு.பொறுப்பாளர் சுவாமி பிரபு பிரேமானந்தர் ஆசியுரை வழங்கினார்.;.

முதன்மை அதிதியாக அம்பாறை மாவட்ட த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் கௌரவ அதிதியாக இலங்கை இந்துசம்மேளனத்தலைவர் என்.அருண்காந் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்.

விசேட அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரட்ணம் த.கலையரசன் மு.இராஜேஸ்வரன் ஆகியோருடன் சிறப்பதிதிகள் நட்சத்திரஅதிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.விஸ்வப்பிரம்மஸ்ரீ காந்தன்குருக்கள் பாமாலை பாடினார்கள்.

இதனைவிட சுவாமிகளின் அபிமானிகள் பலர் கலந்துகொண்டார்கள். சுவாமியின் வாழ்க்கை சிறுகுறிப்பு பற்றிய 'விபுலையில் விபுலமுனி' எனுத் மகுடத்திலான சங்கப்பலகை திறந்துவைக்கப்பட்டது. இது விபுலானந்த சதுக்கத்திலமைந்துள்ள காரைதீவு பிரதேசசபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

இதனையும் தேசிய இந்துக்கொடியையும் சுவாமி பிரபுபிரேமானந்தாவும் அமைச்சர் சுவாமிநாதனும் திறந்துவைத்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -