எப்.முபாரக்-
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமாபுரப் பகுதியில் சனிக்கிழமை (16) இரவு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி கே.டீ.கே.ருவன்குமார (வயது 31) என்பவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.
சோமாபுரப் பகுதியிலுள்ள வீதியொன்றில் நண்பர் ஒருவருடன் இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது திடீரென வீதியைக் குருக்கருத்த யானை இவரைத் தாக்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், ஞாயிற்றுக்கிழமை (17) மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
