க.கிஷாந்தன்-
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளங்கன் கீழ்பிரிவு தோட்டத்தில் (கிளங்கன் வைத்தியசாலைக்கு அருகில்) சுமார் 100 வருடம் பழமைவாய்ந்த மரம் ஒன்றின் பாரிய கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் இரண்டு வீடுகளும் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலும் முற்றாக சேதமடைந்ததுடன் அதேவேளை மேலும் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
18.04.2106 அன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்த பாரிய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கும் பொலிஸார் வீடுகளில் உள்ள பொருட்கள் முற்றாக சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
அதேவேளை முற்றாக சேதமடைந்துள்ள இரண்டு குடியிருப்புகளில் வசிப்பவர்கள் சம்பவ வேளையில் வீட்டில் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழமைவாய்ந்த மேற்படி மரத்தின் முறிந்து வீழ்ந்த கிளையை அப்புறபடுத்தும் நடவடிக்கையில் பொலிஸாரும்இ பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


