
இங்குள்ள பள்ளிகளில் கட்டணமாக ஆண்டுக்கு 40 பவுண்ஸ்கள் வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஏழ்மை காரணமாகவும் அடிப்படை கல்வியை கட்டாயம் முடிக்க வேண்டும் என்பதாலும் பெரும்பாலான இளம் வயது பெண்கள்இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் தேவைக்கு அதிகமான பணப்புழக்கம் இருப்பதால் சில பெண்கள் முழுநேர விபச்சாரத்தில் ஈடுபடும் கொடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பள்ளிப்படிப்புக்கான கட்டணத்தை செலுத்துவதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியரையும் இளம் வயது பெண்களையும் சீரழிக்கும் அவல நிலையும் இங்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதிய விழிப்புணர்வு இல்லாமையால் கருத்தரிக்க நேரிடும் பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ஆண் சமூகம் கைநழுவுவதும், இதனால் தமது குழந்தைக்கும் தமக்கும் என மிக குறைவான ஊதியம் பெறும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திலும் பெண்கள் தள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுபோன்ற நிலையில் தவிக்கும் இளம் வயது பெண்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் அமைப்பு ஒன்று தெருவோர குழந்தைகள் என்ற இயக்கத்தின் வாயிலாக மகளிர் கல்வியை உறுதி செய்ய முனைப்பு காட்டி வருகிறது. ஒட்டுமொத்தமாக 20,000 சியரா லியோன் சிறுமிகள் முதல் இளம் வயதுபெண்களுக்கு கல்வியை உறுதி செய்வதுடன் அவர்களுக்கு தரமான கல்வியை வழங்கவும் இந்த அமைப்பு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.