மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் அவர்களின் புதுவருட வாழ்த்துச்செய்தி

தமிழ், சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் இந்த நல்லதொரு வேளையில் மக்களின் மனதில் ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைந்துள்ளதோடு, தமது, கலாச்சாரம் பாரம்பரியங்களின் ஊடாக எதிர்வரும் காலங்களில் தங்களது எதிர்கால சந்ததியினரை வாழ வழி நடத்த வேண்டிய தேவை உள்ளது. எனவே இப்புதுவருட நன்நாளில் எமது சகோதர உறவுகளின் குடும்ப உறவு பிணைப்பு, பாசம், புனிதத்துவம் என்பவற்றினை மகத்துவப்படுத்தி, அனைத்து இன மக்களும் இந்நாட்டில் ஒற்றுமையுடன் வாழ முயல்வோம் என தனது புதுவருட புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.


மேலும், இந்த நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் இன முரண்பாடுகள் மறக்கப்பட்டு நாட்டில் வாழும் சகல இன மக்கள் மத்தியிலும் ஐக்கியமும், சமாதானமும் உருவாக வேண்டும், நாட்டிலுள்ள சமய, சமூக, அரசியல் தலைவர்கள் இப்புத்தாண்டடில் கடந்த காலங்களில் ஏற்பட்ட துன்ப துயரங்கள் யாவும் பிறக்கின்ற புதுவருடத்திலிருந்து இல்லாதொழியவேண்டும் என்றெல்லாம் பிராத்தித்தவர்களாக தத்தமது வாழ்த்து அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிட்டு வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.


எனவே, இந்நாட்டில் அரசியலில் ஈடுபட்டிருக்கின்ற சிங்கள,தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இப்புத்தாண்டு மற்றும் பண்டிகைக்காலங்களில் தெரிவிக்கின்ற வாழ்த்து அறிக்கைகளில் குறிப்பிடுவதைப்போன்று தமது அரசியல் சார்ந்த செயற்பாடுகளிலும் பரஸ்பரம் விட்டுக்கொடுப்புக்களுடனும், புரிந்துணர்வுடனும், மனிதாபிமானத்துடனும்,முழுநாட்டின் நலன் கருதியும் மக்களின் நலன்கருதியும் செயற்பட முன்வர வேண்டும். 


இதற்கு உதாரணமாகவே நாம் இன, மத, பிரதேச வேறுபாடுகளைத் தூக்கியெறிந்து விட்டு, மனிதர்கள் என்ற அடிப்படையில் இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் அரசியல் ரீதியாகத் தலைமை தாங்கி வழிநடாத்துவோரும் தமது செயற்பாடுகளை இப்புத்தாண்டிலிருந்தாவது இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளின்றி செயற்பட முன்வர வேண்டும்.


பிரதேச சபைகள் தொடக்கம் நாடாளுமன்றம் வரை இந்த இன, மத, மொழி, பிரதேச வேறுபாடற்ற அரசியல்வாதிகள் அதிகாரங்களிலிருந்து மக்களின் நலன்களையும், நம்நாட்டின் வளர்ச்சியையும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். 


எனவே, இப்புத்தாண்டடில் எமது எமது நாட்டில் நல்லாட்சி நடைபெற்றுக்கொண்டிருப்பதை தமிழ், சிங்கள மக்கள் தமது கருத்திற்கொண்டு, தத்தமது சமய, சமூக, அரசியல்தலைமைகளிடம் இன, மத, மொழி, பிரதேச வேற்றுமைகளற்ற ஐக்கிய இலங்கையை எமக்காகவும், எமது சந்ததிகளுக்காகவும் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இப்புத்தாண்டு அமை புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.


M.T. ஹைதர் அலி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -