எம். எச். முஹமட் அவர்களின் ஜனாஸா செய்தி தொடர்பாக -ஹலீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தி

இக்பால் அலி-

ந்த நாட்டின் இன நல்லிணக்கத்திற்காகவும் முஸ்லிம்களுடைய சமய, கல்வி மறுமலர்ச்சிக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய மூத்த அரசியல்வாதியுமான எம். எச். முஹமட் அவர்களுடைய ஜனாஸா செய்தி கேள்வியுற்று நான் ஆழ்ந்த கவலையும் துக்கமும் அடைந்துள்ளதோடு அவரது மரணம் எமது முஸ்லிம் சமூகத்திற்கும் எமது நாட்டினுடைய அனைத்து இன மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் பேரிழப்பாகும் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

அமைச்சர் எம். எச். முஹமட் அவர்களின் ஜனாஸா செய்தி தொடர்பாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் கருத்துத் தெரிவிக்கையில்:

1956 களில் அரசியலில் பிரவேசித்த இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளைத் தேர்தல் தொகுதி அமைப்பாளராகவும் பல்துறை அமைச்சராகவும், சபாநாயகராகவும் மற்றும் கொழும்பு இஸ்லாமிய நிலையத்தின் ஆயுட்காலத் தலைவராகவும் எனப் பல்வேறு தலைமைப் பதவிகளில் இருந்து கொண்டு தம் சமுதாயத்தின் நலன் கருதியும் நாட்டின் நலன் கருதி ஆற்றிய சேவைகள் என்றும் விதந்து பாராட்டக் கூடியவை.

கடந்த காலங்களில் என்னுடைய மாமாவான மறைந்த அமைச்சர் ஏ. சீ. எஸ். ஹமீட் அவர்களுடைய அந்தரங்கச் செயலாளராக இருந்த கால கட்டத்தில் மறைந்த அமைச்சருடன் நெருங்கிப் பழகக் கூடிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அவர் எல்லோருக்கும் முன்மாதரிமிக்க அரசியல்வாதி என்பதற்கப்பால் அவரிடம் இயல்பாகவே எதையும் தன்னலம் கருதாது தம் சமூகத்தை நேசித்து ஆற்றக் கூடிய பண்புகள் நிறைந்து காணப்பட்டன. அNதுவேளை இவர் சேவைகள் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பைக் கொண்டவரும் கூட .

அளப்பரிய சேவையாற்றிய சேவைகளை ஆற்றிய அன்னாரது இழப்பு எமது நாட்டுக்கு பெரும் பேரிழப்பாகும். எனவே துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பம் மற்றும் ஏனைய இந்நாட்டு அனைத்து மக்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -