ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் தேசிய காங்கிரஸிற்கும் இடையில் சந்திப்பு...!

ஜே.எம்.வஸீர்-
க்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வேண்டுகோளிற்கமைய ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் தேசிய காங்கிரஸிற்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றதென தேசிய காங்கிரஸின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் அதன் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர, கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர் அமைச்சர் சுஷில் பிரேமஜெயந்த, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோரும் தேசிய காங்கிரஸின் சார்பில் அதன் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அதன் தேசிய அமைப்பாளர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, சிரேஷ்ட பிரதி செயலாளர் நாயகம் சவுதி அரேபியாவிற்கான முன்னாள் தூதுவர் டாக்டர் யு. உதுமாலெப்பை அவர்களும் கலந்து கொண்தேசிய காங்கிரஸ் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சந்திப்புனர்.

ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குழுவினர் கடந்த காலங்களில் கூட்டமைப்பின் வெற்றிக்கு தேசிய காங்கிரஸ் அளித்த பங்களிப்புகளை நினைவுபடுத்தினர். 2004ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை நடைபெற்ற சகல பாராளுமன்ற தேர்தல்கள், மாகாண சபை தேர்தல்கள், உள்ளுராட்சி மன்ற தேர்தல்களின்போதும் கூட்டமைப்பின் பங்குதாரராக இருந்து கொண்டு கூட்டமைப்பின் வெற்றிக்காக தேசிய காங்கிரஸ் வழங்கிய பங்களிப்பிற்காக கூட்டமைப்பு என்றுமே நன்றியுடன் உள்ளதாக அதன் செயலாளர் தெரிவித்தார். 

கிழக்கு மாகாணத்துடன் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பல தேர்தல்களில் கூட்டமைப்பு வெற்றிபெறுவதற்கு தேசிய காங்கிரஸ் உடனான உறவே காரணம் என்பதையும் சந்தர்ப்பவாத அரசியல் இல்லாமல் பதவி பட்டங்களுக்காக சோரம் போகாமல் உணர்ச்சி வயப்படாமல் முஸ்லிம் மக்களின் பெருவாரியான வாக்குகளை கூட்டமைப்பின் பக்கம் சேர்த்த ஒரு கட்சியாக தேசிய காங்கிரஸ் உள்ளது எனவும் கூட்டமைப்பின் குழுவினர் தெரிவித்தனர்.

தேசிய காங்கிரஸ் பற்றிய கூட்டமைப்பின் நல்லெண்ணத்திற்கு நன்றி தெரிவித்த தேசிய காங்கிரஸின் குழுவினர் இனத்தீர்வு யோசனைகள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு போன்ற விடயங்கள் சிறுபான்மை சமூகங்களின் நலன்கள் குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைகள் பாதிக்கப்படாத வண்ணம் முன்னெடுக்கப்பட வேண்டும் எனக்கோரி அது தொடர்பில் தேசிய காங்கிரஸின் ஆலோசனை வரைபுகளையும் கையளித்தனர். 

இவ்யோசனைகளில் குறிப்பாக கிழக்கில் வாழுகின்ற மூவின மக்களினதும் சகவாழ்வும், ஒற்றுமையும் சீர்குலைக்கப்படாமல் இருக்கக்கூடியவாறான ஏற்பாடுகள் வடகிழக்கின் வெளியில் வாழுகின்ற முஸ்லிம்கள், வடக்கில் வாழுகின்ற முஸ்லிம்கள் கிழக்கில் வாழுகின்ற முஸ்லிம்களின் இருப்பு, பாதுகாப்பு, பொருளாதாரம்; அபிவிருத்தி போன்றவற்றிற்கான உத்தரவாதங்களை அரசியலமைப்பு ரீதியாக பெற்றுக்கொள்வதற்கான விடயங்கள்; முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இருதரப்பும் தமது எதிர்கால அரசியல் நடவடிக்கை பற்றியும் கருத்துகளை பரிமாரிக் கொண்டனர். எதிர்கால தேர்தல் கூட்டமைப்பு பற்றியும் பேசப்பட்டது.

மேலும் தேசிய காங்கிரஸின் அரசியல் தீர்வு ஆலோசனைகள் கூட்டமைப்பிற்கும் தேசிய காங்கிரஸிற்கும் இடையிலான எதிர்கால நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் ஓரிரு வாரங்களில் மீண்டும் ஒருமுறை இருதரப்பும் கலந்தாலோசிப்பதென முடிவு செய்யப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -