ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: தேசிய மாநாட்டு தொண்டர் படையணியின் கவனத்திற்கு - தவம் MPC

திர்வரும் 19.03.2016 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டிற்கு தொண்டர்களாகப் பெயர் கொடுத்துப் பதிவு செய்த அனைத்து இளைஞர்களுக்கும் 'தொப்பி மற்றும் ரீ சேட்' வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 16.03.2016, புதன்கிழமை காலை 8.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அத்தோடு அன்றைய தினமே, ஒன்று சேரவிருக்கும் அனைத்து இளைஞர்களினதும் பங்குபற்றதலோடு காலை 8.30 மணி தொடக்கம் கல்முனை மற்றும் சம்மாந்துறை பஷார்களில் (மார்க்கட்) தேசிய மாநாடு பற்றிய பிரச்சார பவனியும் இடம்பெறவுள்ளது. இதற்கான வாகான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

எனவே, 16.03.2016, புதன்கிழமை காலை 8.00 மணிக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டிற்கு தொண்டர்களாகப் பெயர் கொடுத்துப் பதிவு செய்த அனைத்து இளைஞர்களையும் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் ஒன்றுகூடுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இவ்வண்ணம்,
கட்சிப் பணியில்,
ஏ.எல்.தவம், 
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்,
இளைஞர் விவகார மற்றும் வேலைவாய்ப்புச் செயலாளர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -