குடும்ப பிரச்சனை,தொலைக்காட்சி நடிகர் தற்கொலை - ராதிகாவிற்கு நன்றி, அதிர்ச்சியில் திரையுலகினர்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் சாய் பிரசாந்த். நடனம், மிமிக்ரி என பன்முக திறமை கொண்ட இவர் சினிமாவிலும் நடித்துள்ளார். வடகறி படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார்.

சமீபத்தில் தான் இவருக்கு திருமணமானது. இந்நிலையில் இன்று இவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபகாலமாக சீரியல் நடிகர்கள், இயக்குனர்கள் தற்கொலை செய்துவருவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் சென்னையில் உள்ள வீட்டில் தனியாக இருந்த போது விஷம் குடித்து இறந்துள்ளார்.

இதுக்குறித்து அவரே ஒரு கடிதத்தில் ‘தீராத குடும்ப பிரச்சனை, மன உலைச்சலே என் தற்கொலைக்கு காரணம்’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதில் அவர் கூறுகையில்:

’சுஜிதா, உன் மீது அதிக காதல் வைத்திருந்தேன், என்னுடைய மன இறுக்கம் காரணமாக உன்னை 4 முறை அடித்தேன். ஆனால், என் மரணத்திற்கு ஒரு போதும் நீ காரணமில்லை, இது நானே எடுத்த முடிவு.

மேலும், என் பெற்றோர் உனக்கு ஐந்து லட்சம் பணமும், உனது நகைகளையும் கொடுத்துவிடுவார்கள், என் மரணத்திற்கு பிறகாவது தயவு செய்து உன் கோபத்தை விடு.

உன் சித்தப்பா என் அப்பாவிடம் உபயோகித்த வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்கும்படி சொல்லவும், ராதிகா சரத்குமார் அவர்களுக்கு மிகவும் நன்றி’ என உருக்கமாக அந்த கடிதத்தை முடித்துள்ளார்.

இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகாரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், இரண்டாவது மனைவியும் இவருடன் சண்டையிட்டு அம்மா வீட்டிற்கு சென்றதால் மேலும் மன உலைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துள்ளார் என கூறப்படுகின்றது. மேலும், இந்த கடிதத்தில் பல நேரங்களிலும், பிரச்சனைகளிலும் ஆதரவாக இருந்த ராதிகா மேடம் அவர்களுக்கு நன்றி’ எனவும் குறிப்பிட்டுள்ளார். இவர் தற்கொலை குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -