ஜுனைட்.எம்.பஹ்த்-
காத்தான்குடி சிறுமி யுஸ்ரியை நெருப்பினால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய ராட்சகி மும்தாஜுக்கும் , கொடுமைக்கு துணை நின்ற சிறுமியின் தந்தை மெளலவி மஜீத் ரப்பானிக்கும் மட்டு மாவட்ட நீதிமன்றம் பிணை வழங்கக் கூடாது எனக்கோரி இன்று (21.03.2016) திங்கட்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மொன்று இடம்பெற்றது.
இக் கண்டன ஆர்ப்பாட்டத்திணை காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ் ஆர்பாட்டத்தில் அதிகமான ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டனர். இவ் ஆர்பாட்டக்காரர்கள் "நீதி கொடு! நீதி கொடு! சிறுமி யுஸ்ரிக்கு நீதி கொடு!,யுஸ்ரி சிறுமிக்கு நீதி வேண்டும்,சிறுமியின் உடலில் சூடு போட்ட அயோகியர்களுக்கு உடன் தண்டனை வழங்கு, " போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





