மிகவும் பின்தங்கிய நாவிதன்வெளியில் சசிரேகா 9ஏ பெற்று சாதனை..!

வலயக்கல்விப்பணிப்பாளர் நஜீம் இன்று நேரில் சென்று கௌரவித்தார்.




சம்மாந்துறை வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய நாவிதன்வெளிக்கோட்டத்திலுள்ள 15ஆம் கிராமம் திருவானூர் விவேகானந்தா மகா வித்தியாலய மாணவி பரமானந்தம் சசிரேகா 9பாடங்களிலும் 9ஏ சிறப்புச்சித்திகளைப்பெற்றுச்சாதனை படைத்துள்ளார்.

அக்கோட்டத்தில் 9ஏ பெற்ற ஒரேயொரு மாணவியான சசிரேகா சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் இன்று திங்கட்கிழமை நேரில் சென்று இனிப்புவழங்கி பாராட்டிக் கௌரவித்தார்.

இன்று காலை பாடசாலை முன்றலில் அதிபர் பி.பேரானந்தம் தலைமையில் இடம்பெற்ற சிறுவைபவத்தில் ஆசிரியர்கள்புடைசூழ பணிப்பாளர் நஜீம் இப்பாராட்டைத்தெரிவித்தார்.

அவருடன் நாவிதன்வெளிக்கோட்டக்கல்விப்பணிப்பாளர் ச.சரவணமுத்து உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோரும் சென்றிருந்தனர்.

மனம்நிறைந்த 9ஏ- அங்கு பாராட்டுத்தெரிவித்த நஜீம்; : 

எமது வலயத்தின் பெயரைக் காப்பாற்றிய மாணவி சசிரேகாவின் இந்த 9ஏ சித்தியென்பது சாமானியமானதல்ல. எமது மனம் நிறைந்த 9ஏ சித்தியாகும். இது பல 9ஏ சித்திகளுக்கு ஒப்பானதாகும். மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் இம்மாணவி 

இச்சாதனையைப்படைத்திருப்பதென்பது எமக்கு பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது. இம்மாணவியின் சாதனைக்கு பின்புலத்திலிருந்த அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அபிவிருத்திச்சபையினர் பாடசாலைச்சமுகத்தினர் அனைவரையும் எமது வலயம்சார்பில் மனமாரப்பாராட்டுகின்றேன். வாழ்த்துகின்றேன். என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -