ஜனாதிபதி, பிரதமர். ஏதிர்க்கட்சி தலைவர் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டில் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளில் சிலவற்றுக்காவது தீர்வை முன்வைக்காமை மூலம் முஸ்லிம்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி குறிப்பிட்டார்.
மேற்படி மாநாடு பற்றி உலமா கட்சியின் கருத்தை வினவிய போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
கோடிக்கனக்கான ரூபாய்கள் செலவு செய்து ஒரு கட்சியின் மாநாடு நடத்தப்படும் போது அக்கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் சாத்தியமான பிரச்சினகளுக்கு தீர்வுகள் காணப்படுத்துவதே கட்சியின் அரசியல் வெற்றியாகும். இதனை விடுத்து மக்கள் தலைகளை மட்டும் காட்டுவது வெற்றியல்ல,
முஸ்லிம் காங்கிரசின் மேற்படி மாநாட்டுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொண்டிருந்தும் அவர்களை பயன்படுத்தி சஊதி அரேபிய அரசால் வழங்கப்பட்ட சுனாமி வீடுகளை வழங்கியிருக்கலாம். ஒலுவில் துறைமுகம் காரணமாக காணியை இழந்த மக்களுக்கு நஷ்டஈடு கிடைக்காதவர்களுக்கு அதனை வழங்கியிருக்கலாம். பாலமுனை ஒலுவில் மக்கள் வாழும் அஷ்ரப் நகர் பிரச்சினைகளுக்கு முடிவு காணப்பட்டிருக்கலாம். மௌலவி ஆசிரிய ர் நியமனத்தை வழங்குவோம் என்று வாக்களித்திருக்கலாம். இது எதுவுமே நிகழவில்லை.
அத்துடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மற்றும் பிரதமரால் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினகைளை கூற வைத்து அதற்குரிய தீர்வாக இவற்றை முன் வைப்போம் என சொல்ல வைத்திருக்கலாம். அதனை விடுத்து ஹக்கீம் என்ற தனி மனித புகழ்பாடுதலுக்காகவே இம்மாநாடு நடத்தப்பட்டு முஸ்லிம்கள் படு மோசமாக ஏமாற்றப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
தேர்தல் காலத்தில் கல்முனை மாவட்டத்துக்கு வந்து அதனை தருவோம் இதனை தருவோம் எனக்கூறி மக்களை ஏமாற்ற முடிந்தவர்களால் இபபடியான மாபெரும் மாநாட்டை கூட்டி எதனையும் சமூகத்துக்கு சாதிக்க முடியவில்லை என்றால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இந்த ஆட்சியில் கையறு நிலையில் உள்ளது என்பதே தெளிவாகிறது.
அத்துடன் உலமாக்களை மேடையில் வைத்துக்கொண்டு குமரிகளின் குத்தாட்டத்தை அரங்கேற்றி குர்ஆன் ஹதீத் யாப்பை கேவலப்படுத்தியுள்ளதுடன் இஸ்லாத்தில் அதிக பிடிப்புக்கொண்ட பாலமுனை மக்களையும் அசிங்கப்படுத்தியுள்ளனர். இத்தiகைய அனாச்சாரத்தை பாலமுனையில் உள்ள சஹ்வா அறபுக்கல்லூரி அதிபர் இன்று வரை கண்டிக்காமை கவலை தருகிறது.
ஆக மு. காவின் தேசிய மாநாடு முஸ்லிம்களை பொறுத்தவரை படு தோல்வியாகவும் ஹக்கீம் என்ற தனி மனிதனை காப்பாற்றும் விடயத்தில் மட்டும் வெற்றியாகவும் முடிந்துள்ளது என்பதே உலமா கட்சியின் கருத்தாகும்.
