திடீர் மின்சார தடை :விசேட குழு நியமனம்

நாட்டிற்குள் ஏற்பட்ட திடீர் மின்சார தடை மற்றும் அது சம்பந்தமாக ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆராய்ந்து பரிந்துரை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட குழு ஒன்றை நியமித்துள்ளார்.

இந்த நிலைமை தொடர்பான வெளி நடவடிக்கைகளை ஆராய்ந்து, குறித்த நிலைமை பற்றி கவனத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்க இந்த குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

மின் வலு எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, அமைச்சர்கள் சுசில் பிரேமஜயந்த, சம்பிக்க ரணவக்க, சாகல ரத்நாயக்க, பிரதியமைச்சர்களாக இரான் விக்ரமரத்ன, அஜித் பீ. பெரேரா ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

குழுவின் முதலாது அறிக்கை ஒரு வாரத்திற்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

மின்சார துறையில், காணப்படும் குறைப்பாடுகள், பிரச்சினைகளை தீர்த்து, நாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் அபிவிருத்தித்துறையில் எவ்வித அழுத்தங்களும் இன்றி சேவையை பெற்றுக்கொடுக்க தேவையான பரிந்துரைகளை இந்த குழு முன்வைக்க உள்ளது.

மூன்று மாத காலத்திற்குள் இந்த குழுவை தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -