நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க முஸ்லிம் சமய பண்பாட்டலுவகத்திற்கு விஜயம்..!

ஏ.எஸ்எம். ஜாவித்-
ட்டுமானப் பணிகள் இடை நிறுத்தப்பட்டிருக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கட்டிடத்தின் பணிகளை மீள ஆரம்பிக்கும் வகையில் அதனை பார்வையிடுவதற்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று (01) அமைச்சர் ஹலீமின் அழைப்பின் பெயரில் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இவருடன் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றிருந்தனர். இவர்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் வரவேற்று கட்டிடத் தொகுதியை அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கு காண்பித்தார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு திணைக்களத்தின் தேவை கருதி சுமார் 9 மாடிகளைக் கொண்ட கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் ஒன்பது மாடிகள் கட்டப்பட்ட நிலையில் கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசால் கட்டிட வேலைகளுக்கான நிதி நிறுத்தப்பட்டதால் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக குறித்த கட்டிட வேலைகளை ஒப்பந்தகாரர்கள் நிறுத்தியிருந்தனர்.

எனினும் புதிய தேசிய நல்லிணக் அரசு பதவிக்கு வந்த பிறகு இதன் வேலைகளை ஆரம்பிக்கும் விடயங்கள் அரசுக்கு அமைச்சர் ஹலீமினால் முன் வைக்கப்பட்டிருந்தன. 

இதன் நிமிர்த்தம் அமைச்சர் மேற்படி கட்டிடத்தின் நிலைமைகளை கண்டறிந்து முதற்கட்டமாக மூன்று மாடிகளை பூரணப்பட்டுத்தித் தருவதாக வாக்குறுதியளித்துள்ளார். இவ் வேலைகளை முடிக்க சுமார் 284 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -