எஸ்.அஷ்ரப்கான்-
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்களுக்கு கலாநிதிப்பட்டம் வழங்கவிருப்பது வரவேற்றத்தக்கதும், சிறப்பான முடிவுமாகும் என்று சாய்ந்தமருது உலமா சபை தலைவரும், சாய்ந்தமருது பைத்துல் ஸக்காத் தலைவரும், தஹ்வா இஸ்லாமிய கலாபீட தலைவரும், முன்னாள் பிரதி அதிபருமான அல்-ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காசிம் தென்கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடும்போது,
தென்கிழக்குப் பல்கலைக்கழகமானது கடந்த காலங்களில் சிறந்த ஆளுமைமிக்க தலைவர்களை உருவாக்கி எமது சமூகத்திற்கு பாரியசேவையினை வாழங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் எமது மண்ணுக்கு பெருமை தேடித்தந்த ஒரு நம்பிக்கையான தலைவர் என்றுவர்ணிக்கப்படுபவரும், கல்முனை அபிவிருத்தியின் நாயகன் என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களுக்குகலாநிதிப்பட்டம் வழங்க அவரை தெரிவு செய்தமையானது மிகவும் பொருத்தமானதும், வரவேற்கத்தக்கதுமான ஒரு விடயமுமாகும்.
ஏனெனில் இவர் கடந்த காலங்களில் குவைத் நாட்டுத்தூதுவராக இருந்த காலங்களிலும் கூட எமது பிரதேச பள்ளிவாசல்களுக்கும்,மத்ரஸாக்களுக்கும் ,கல்விப்பணிக்காகவும் பெரும்பான்மையான பணத்தை அந்நாட்டிலிருந்து கொண்டு வந்து அமானிதமாகஒப்படைத்திருந்தார். அதுமாத்திரமின்றி எங்களிடம் அடிக்கடி எமது பிரதேசத்தில் நல்ல மார்க்க விழுமியத்தை வழங்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசிக்கொள்பவருமாவார்.
எப்போதும் உலமாக்களை பெரிதும் மதிக்கின்ற நல்லுள்ளம் படைத்த இப்படிப்பட்டஅரசியல் வாதிக்கு இப்பட்டத்திணை வழங்குவதன் மூலம் பாரிய சமூகப் பொறுப்பை இந்த தென்கிழக்குப் பல்கலைக்கழகம் நிவர்த்திசெய்கின்றது.
ஆகவே இந்த முடிவினை எடுத்த தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்தினரை வாழ்த்துவதோடு முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களுக்கும் இவ்வேளையில் திடகாத்திரமாக, உடல் ஆரோக்கியம் கிடைக்க பிரார்த்திக்கின்றேன். சாய்ந்தமருது உலமா சபை தலைவரும், சாய்ந்தமருது பைத்துல் ஸக்காத் தலைவரும், தஹ்வா இஸ்லாமிய கலாபீட தலைவரும், முன்னாள் பிரதி அதிபருமான அல்-ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காசிம் மேலும் குறிப்பிட்டார் .
