பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் புதிய செயலாளராக எச்.டப்ளியூ. குணதாஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அந்தப் பதவியில் இருந்த லெசில் டி சில்வா பதவி நீக்கப்பட்டுள்ளதாக கூறிய கடிதம் ஒன்று தனக்கு கிடைக்கப் பெற்றதாக இன்று தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலாளர் பி.பீ அபேசுந்தவின் கையெழுத்துடன் கூடிய கடிதம் கிடைத்துள்ளதாகவும், பதவி நீக்கத்துக்கான காரணம் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை எனவும் அத தெரணவிடம் லெசில் டி சில்வா கூறியிருந்தார்.
இந்நிலையில் எச்.டப்ளியூ. குணதாஸ பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
