ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகளுக்கு தடை – பாராளுமன்றில் பிரேரணை

பாடசாலைகளில் 9ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்களைத் தடை செய்யும் வகையில் பாராளுமன்றத்தில் தன்னால் முன்வைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட யோசனையை சட்டமாக்குவதற்கு சகல மதத் தலைவர்களினதும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வேன் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

தன்னால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த தனியார் பிரேரணை தொடர்பில் மல்வத்தை மகாநாயக்க தேரரை சந்தித்து விளக்கமளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தனது பிரேரணை குறித்து மகாநாயக்க தேரரிடம் பா.உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் நீண்ட விளக்கமொன்றினை வழங்கினார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் விளக்கமளிக்கையில்; 

9ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களின் மத அறிவு படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. இதனால் நாட்டில் குற்றச்செயல்கள் பெருகிவருகின்றன. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள் என இக்குற்றச் செயல்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். எனவே இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் 9ஆம் ஆண்டு வரையான மாணவர்களின் மத அறிவினை மேம்படுத்த விரிவான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். கிழமைக்கொரு முறையாவது மாணவர்களின் மத அறிவினை மேம்படுத்த பெற்றோர்கள் முன்வர வேண்டும். இது தற்காலத்தின் மிகவும் இன்றியமையாத தேவையாகும்.

எனவே ஞாயிறு தினங்களில் 9ஆம் ஆண்டு வரை தனியான வகுப்புக்களை தடை செய்ய வேண்டுமென்ற தனியார் பிரேரணையை முன்வைத்துள்ளேன். மல்வத்தை மகாநாயக்க தேரர் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இது குறித்து இந்து, இஸ்லாம் மதத் தலைவர்களுடனும் கலந்துரையாடவுள்ளேன். அவர்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்குவார்களென நம்புகிறேன்.

மத ரீதியான கல்வியகங்கள் திறக்கப்படுகையில் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்ற கருத்தினை நோக்காகக்கொண்டு எனது இப்பிரேரணையை வென்றெடுக்க மக்களினதும் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றேன். இதன்மூலம் எமது இலங்கைத் தாய் திருநாட்டை உலகின் பண்புமிக்க நாடாக காட்டுவதற்கு முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -