எப்.முபாரக்-
கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு தரம் 111 ஆம் வகுப்புக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக் கொள்ளுவதற்கான போட்டிப் பரீட்சைகள் அடுத்த மாதம் 9ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறுவதற்காக விண்ணப்பித்த பட்டதாரிகளுக்கு அனுமதி அட்டைகள் அனுப்பி வைத்துள்ளதாக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திஸாநாயக்கா அறிவித்துள்ளார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைகள் திருகோணமலை உவர்மலை விவேகானந்த கல்லூரியில் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி அட்டைகள் கிடைக்காத பட்டதாரிகள் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் தொடர்பு கொள்ளமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
