சம்மாந்துறையில் ஆடைத் தொழிற்சாலை : மண்ணை காக்கும் மன்சூர்

மூத்த போராளி-

சம்மாந்துறையில் ஆடைத் தொழிற்சாலை என்பது நீண்டகால கனவாகவே இதுவரை இருந்து வந்தது. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் காலத்தில் நாடு முழுவதும் ஆடைத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கப்பெற்றது. ஆயினும் சம்மாந்துறைக்கு ஆடைத் தொழிற்சாலை என்பது அந்நேரம் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. 

அதன் பின்னர் அமைச்சர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக பலர் சம்மாந்துறை மக்களின் வாக்கினை பெற்று வலம் வந்தமை குறிப்பிடத்தக்கதாயினும் சம்மாந்துறையில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பொருட்டு ஒரு ஆடைத் தொழிற்சாலையொன்றை உருவாக்குவதற்கு பொருத்தமான எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை என்பது சம்மாந்துறை மக்களின் ஆயுள்கால கவலையாக இருந்து வந்தது. 

சம்மாந்துறை இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பொருட்டும், அம்பாறையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு தினமும் வேலைக்குப்போய் சொல்லெனா துயரங்களை அனுபவிக்கும் இளைஞர் யுவதிகளின் இன்னல்களை தீர்ப்பதற்கு சம்மாந்துறையில் ஒரு ஆடைத் தொழிற்சாலை அமைவது அவசியம் என உணர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக பதவி வகித்த போது இதற்கான ஆரம்ப வேலைகளை ஆரம்பித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக பதவி வகித்த போது சம்மாந்துறையில் ஒரு ஆடைத் தொழிற்சாலை அமைப்பதற்கான தீர்மானத்தை கிழக்கு மாகாண அமைச்சர் வாரியத்தில் முன்வைத்து அதற்கான அனுமதியையும் பெற்றுக்கொண்டார். ஏறத்தாழ 40 மில்லியன் பெறுமதியில் குறித்த ஆடைத் தொழிற்சாலை அமையப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கிழக்கு மாகாண அமைச்சர் வாரியத்தில் ஆடைத் தொழிற்சாலை அமைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து, குறித்த ஆடைத் தொழிற்சாலையானது சம்மாந்துறையில் அமையப்பெறாமல் தடுப்பதற்கு அரசியல் குரோதமுள்ள, பொறாமை பிடித்த பலர் ஏராளமான முயற்சிகள் எடுத்து தொல்வியடைந்தமையை இவ்விடத்தில் கட்டாயம் தெரிவிக்க வேண்டிய விடயமாகும். 

ஏற்படுத்தப்பட்ட அனைத்து தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் தனது பெருமுயற்சியினால் தகர்த்த பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் இறுதியாக 40 மில்லியன் பெறுமதியில் ஆடைத் தொழிற்சாலை அமைவதை உறுதிப்படுத்தியுள்ளமையானது அவரின் மக்கள் நலன் சார்ந்த ஆளுமைக்கு கிடைத்த வெற்றியாகும். சம்மாந்துறை மண்ணைக்காப்பதில் மன்சூருக்குள்ள அக்கறை மாதிரி சம்மாந்துறையை சேர்ந்த வேறு எந்த அரசியல்வாதிக்கும் இல்லை என்று மக்கள் பெருமையுடன் தெரிவித்து வருவதிலிருந்து இதனை புரிந்து கொள்ளலாம். 

இன்ஷா அல்லாஹ்... குறித்த ஆடைத் தொழிற்சாலை நிர்மானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 2016.03.03 ஆந் திகதியன்று மாலை 4.00 மணியளவில் சம்மாந்துறை வங்களா வாடி நெல் களஞ்சியசாலைக்கு அருகாமையில் மிக விமர்சையாக இடம்பெறவுள்ளது. அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் ஏற்பாட்டுக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -