நாடு பூராகவும் 7 1/2 மணித்தியால மின்சாரத்தடை அமுல் - விபரம்

அடுத்து வரும் இரு தினங்களுக்கு நாடு பூராகவும் 7 1/2 மணித்தியால மின்சாரத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த மின்சாரத்தடை இரு பகுதிகளாக மேற்கொள்ளபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி நாளை புதன்கிழமையும் வியாழக்கிழமையும் குறித்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரையும் மாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரையும் ஒரு பகுதி மின்வெட்டும் நண்பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 6 மணிவரையும் இரவு 8 மணி முதல் இரவு 10 மணிவரையும் மற்றை பகுதி மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன் படி பகல் வேளைகளில் 5 1/2 மணித்தியாலங்களும் இரவு வேளைகளில் 2 மணித்தியாலங்களும் நாளொன்றுக்கு மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -