கொலை சந்தேகநபர் உதயகுமாருக்கு ஏப்ரல் 4 வரை மீண்டும் விளக்கமறியல்!



நேற்று மன்றில் அவருக்காக இருசட்டத்தரணிகள் பிரசன்னம்!

காரைதீவு நிருபர் சகா

ல்முனையை உலுக்கிய கல்முனை சர்வோதய நிதிநிறுவனத்தின் பெண்முகாமையாளர் திலீபன் சுலக்சனா(வயது 33)கொலை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முகாமையாளர் பொன்னம்பலம் உதயகுமாருக்கு நேற்று மீண்டும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில்வைக்க நீதிவான் பயாஸ்றசாக் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று 28ஆம் திகதி திங்கட்கிழமை மட்டு.சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை பஸ்ஸில் சந்தேகநபர் பொ.உதயகுமார் பாதுகாப்பாக மன்றிற்கு கொண்டுவரப்பட்டார்.

கல்முனை நீதிவான்நீதிமன்ற நீதிவான் பயாஸ்றசாக் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்;படுத்தப்பட்டார்.

அப்போது சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணிகளான ஏ.மொகமட் பாறூக் எம்.மனார்டீன் ஆகியோர் ஆஜராகினர்.

கடந்த தடவை:

கடந்ததடவை அதாவது கடந்த 14ஆம் திகதி சந்தேகநபரை கல்முனை நீதிமன்றிற்கு முதன்முதலாக கொண்டுவந்தபோது அன்றையதினம் கல்முனை மாகரில் பொதுமக்களது ஆர்ப்பாட்டம் ஊர்வலம் பொம்மை எரிப்பு இடம்பெற்றிருந்தது.

அதில் கொலைச்சந்தேகநபருக்காதரவாக சட்டத்தரணி எவரும் ஆஜராகக்கூடாதென்பது அவர்களது கோரிக்கையாகஇருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று மன்றில்:

14நாட்களின் பின்னர் நேற்று 28ஆம் திகதி மீண்டும் நீதிமன்றிற்கு சந்தேகநபர் உதயகுமார் கொண்டுவரப்பட்டார்.

அதன்போது அவருக்கு மேலும் ஏப்ரல்மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் பயாஸ்றசாக் உத்தரவிட்டார்.

உத்தரவு வழங்கப்பட்டபின்னர் பாதுகாப்புகாரணங்களுக்காக அவரை விசேட வாகனத்தில் ஏற்றி மீண்டும் மட்டு.சிறைச்சாலைக்கு கொண்டுசென்றனர்.

பொலிசார் விசாரணை தொடர்கிறது!

இதேவேளை கல்முனைப் பொலிசார் இக்கொலைச்சம்பவம் தொடர்பில் தொடர்ந்து பலகோணங்களிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய தலைமையகப்பொறுப்பதிகாரி எ.டபிள்யு.அப்துல் கபார் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -