பொலிஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனினும் அவர் ஆஜராக வேண்டிய தினம் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
பிரபல றகர் வீரர் வசீம் தாஜுத்தீன் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத்திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இக்குற்றச்சாட்டின் கீழ் பெரும்பாலும் இந்த வார நடுப்பகுதிக்குள் அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்படுவது குறித்த தகவல்கள் முன்கூட்டியே கசியவிடப்பட்டதன் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலையில் முக்கிய பிரமுகருக்கான சிறைக் கொட்டடி தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவியுள்ளன.
