மஹிந்தவிற்கும் கோத்தபாயவிற்கும் முன்னாள் நாய் - நாயுடன் ஆசிர்வாதம்

படையினரை போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வதை எதிர்த்து மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் பொதுமக்களிடம் கையொப்பம் திரட்டும் நடவடிக்கைகளை இன்று ஆரம்பித்து வைத்துள்ளனர்.

கொழும்பு கோட்டையில் உள்ள விகாரை ஒன்றில் நடந்த இந்த ஆரம்ப விழாவில் அண்ணனும், தம்பியும் முதல் கையெழுத்து இட்டிருந்தனர்.

தொடர்ந்து மகிந்த ஆதரவு அணியினரும், கூட்டு எதிர்க்கட்சியினரும் கையெழுத்திட்டார்கள். இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் ஆழ்ந்த யோசனையில் இருந்த வேளை ஒரு கறுப்பு நாய் அவர்களுக்கு ஆதரவை தெரிவித்து தானும் கையெழுத்து இட வந்தது போல அங்கு பிரவேசித்தது.

இதனை அவதானித்தவர்கள் மகிந்தவிற்கும், கோத்தபாயவிற்கும் ஆதரவு தெரிவிக்க நாய் வந்துவிட்டது என நகைச்சுவையாக பேசிக்கொண்டனர்.

இதேவேளை நாய் என்பது இந்துக்களின் காவல் தெய்வம் ஆகையால் படையினருக்கும் போர்க்குற்றவாளியான கோத்தபாய, மற்றும் மகிந்தவிற்கும் காவலாக அது உட்பிரவேசித்துள்ளது என்றும், இனிமேல் இவர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. எல்லாமே வைரவர் பாத்துக் கொள்வார் என இன்னும் சிலர் கிண்டல் தொனியில் பேசிக்கொண்டனர் என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனியென்ன எல்லாம் அந்த வைரவர் செயல் தான்.....

ஜோதிடத்தை நம்பி தன் ஆட்சியை இழந்த மகிந்தர் இப்பொழுது நாயின் துணையோடு மீண்டும் ஆட்சிக்கு வரப்போகிறார். இதோ சிங்கள மக்களையும், படையினரையும் மீட்கப்போகின்றார். நம்புங்கள்.. நம்புங்கள் என மகிந்தருக்கு எதிரான பிரிவினர் இக் கூட்டத்திற்கு பின்னால் நின்று சிரித்தவாறே தெரிவித்ததாக அங்கிருந்த சிலர் தெரிவித்தனர்.

இதேவேளை இந்தச் சம்பவத்தினை சிங்கள ஊடகங்கள் இரு மாறுபட்ட கருத்துக்களோடு நோக்குகின்றன. குறிப்பாக இந்த விடையம் நகைச்சுவையாக எழுதும் ஒரு தரப்பும், இதனை முக்கியமான செய்தியாக இன்னொரு தரப்பும் வெளிப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்வின்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -