ஹாசிப் யாஸீன்-
இந்தியா குவாகத்தியில் இடம்பெற்ற 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில்பங்குபற்றி அசாம் விமான நிலையத்திலிருந்து விசேட விமானத்தின் மூலம் நாடு திரும்பியவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலானவிளையாட்டு வீரர்கள், அதிகாரிகளை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துபெற்றோலிய கனிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தலைமையிலான பாராளுமன்றஉறுப்பினர்களான ராஜ கர்ணா, இஷாக் ரஹ்மான் உள்ளிட்ட விளையாட்டுத்துறை அமைச்சின்அதிகாரிகள் சகிதம் வரவேற்றனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் சந்திம வீரக்கொடி,
நடைபெற்று முடிந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அதிக பதக்கங்களைப்பெற்று சாதனை படைக்க காரணமாக இருந்த எமது நாட்டு வீர, வீராங்கனைகளைபாராட்டுவதோடு இதற்கு களம் அமைத்துக் கொடுத்த விளையாட்டுத்துறை அமைச்சர்தயாசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் உள்ளிட்டஅமைச்சின் அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள் அனைவரையும் பாராட்டுகின்றேன் எனத்தெரிவித்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ஹரீஸ்,
தெற்காசிய விளையாட்டு போட்டியில் எமது நாட்டு வீரர்கள் 186 பதக்கங்களைப் பெற்று புதியசாதனை ஒன்றினை படைத்துள்ளனர். இச்சாதனையினை படைத்த எமது நாட்டு வீர,வீராங்கனைகளையும் இவர்களுக்கு தகுந்த பயிற்சியளித்த பயிற்றுவிப்பாளர்களையும் எமதுவீரர்களுக்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்த அமைச்சின் அதிகாரிகளையும்பாராட்டுகின்றேன்.
விளையாட்டுப் போட்டி ஒன்றில் இலங்கை அதிகூடிய பதக்கங்களைப் பெற்று சாதனைபடைத்ததையிட்டு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் என்ற ரீதியில்பெருமையடைகின்றேன்.
இவ்விலக்கினை அடைவதற்கு எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நாட்டின் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் தயாசிறி ஜயசேகரஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கை விளையாட்டுத்துறை மூலம் சர்வதேசத்தில் புகழை எட்டியுள்ளதுடன் எமதுநாட்டை சர்வதேசத்தை திரும்பிக் பார்க்கவும் வைத்துள்ளது. இதன் மூலம் எமது நாட்டுக்குஎதிர்காலத்தில் பல்வேறு நன்மைகள் சர்வதேச நாடுகளிடமிருந்து கிடைக்க வாய்ப்புள்ளதுஎனவும் தெரிவித்தார்.



