சுகவீனமடைந்து சிங்கப்பூர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை நேரில் சென்று நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி அவர்கள் சிங்கப்பூருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
எந்தவித பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் இல்லாது மிகவும் சாதாரணமாக சிங்கப்பூர் சென்றடைந்த ஜனாதிபதி, அமைச்சர் ராஜித சேனாரத்ன சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைக்கு சாதாரண ஒருவரைப்போல் விஜயம் செய்துள்ளார்.
இதேவேளை சிங்கப்பூரின் வீதிகளிலும் உணவகங்களுக்கும் சாதாரண ஒருவரைப்போல் விஜயம் செய்திருப்பது ஜனாதிபதியின் எளிமையினை எடுத்தியம்புகின்றது.



