அபு அலா -
அட்டாளைச்சேனை சம்புநகர் கிராமத்துக்குள் காட்டு யானைகள் உட்புகுந்து வீட்டுத் தோட்டங்களையும், தென்னம்மரங்களையும் வாகனங்களையும் சேதப்படுத்தியை கேள்வியுற்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று மதியம் (27) குறித்த கிராமத்துக்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டு பாதிக்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரையும், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரையும் அலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு இதற்கு உனடி நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் இம்மக்கள் தொடர்ச்சியாக இந்த காட்டு யானைகளினால் பாதிக்கப்பட்டு வருவதையும் இதற்கு தகுந்த நடவடிக்கையினை உடனடியாக எடுக்கவேண்டும் என்ற வேண்டுகோள் ஒன்றை குறித்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் 36 தென்னை மரங்களும், ஒரு குடிசையும், மரக்கறித் தோட்டங்களும், மோட்டார் வாகனம் ஒன்றும் சேதத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விஜயத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என்.எல்.எம்.யாசீர் ஜமன், நிந்தவூர் ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.ஏ.நபீல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




