பரிஸ்டர் ஹாஷிம் வாழ்வியல் ஒரு நோக்கு நூல் வெளியீட்டு விழாவும் சேவை நலன் பாராட்டு கெளரவமும் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் இடம் பெற்றது.
அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.நஸீர் மாகாண சபை உறுப்பபினர் சிப்லி பாறுக் வட்டரக விஜித தேரர் ஜனாதிபதியின் இணைப்பாளர் பஷீர் ஹாஜி ஐக்கிய தேசிய கட்சி சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ஹசனலி உட்பட பல கல்விமான்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு நஸீர் ஹாஜியார் தலைமை தாங்க நூலாசிரியர் எம்.அப்துல் கபூர் அவர்களால் வெளியிடப்பட மாகாண அமைச்சர் நஸீர் பெற்றுக் கொண்டார்.
நூலின் நயவுரை கிண்ணியா வலயக்கல்வி பணிப்பாளர் அகமட் லெப்பை அவர்களாலும் வெளியீட்டுரை பரிஸ்டர் ஹாஷீம் பெளண்டேசனின் தவிசாளர் அதிபர் ஆதம்லெப்பை அவர்களாலும் நிகழ்த்தப்பட்டது.
விழாவில் அம்பாரை மட்டக்களப்பு மாவட்ட புத்திஜிவிகள் கல்விமான்கள் சமு சேவையாளர்களும் கெளரவிக்கப்பட்டனர்.









