பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு காதலர்தின வாழ்த்து - சம்பவ அமைச்சரிடம் கேள்வி

வெலண்டைன் தினத்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழுத்தம் பிரயோகித்தமை தொடர்பான கேள்விக்கு கடும் கோபத்துடன் அமைச்சர் ஒருவர் செய்தியாளர் சந்திப்பிலிருந்து எழுந்து சென்றுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவந்துள்ளதாவது,

கடந்த வெலண்டைன் தினத்தில் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கட்சியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தொலைபேசி ஊடாக வெலண்டைன் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் நீர்கொழும்பில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவான கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் குறித்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் ஊடகங்களுக்கும் கசிந்திருந்தது.

சுதந்திரக்கட்சியின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் குறித்த அமைச்சரும் கலந்து கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர்கள் மேற்கண்ட சம்பவம் தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.

இதன் காரணமாக கோபமுற்ற அமைச்சர் செய்தியாளர் சந்திப்பிலிருந்து இடைநடுவில் எழுந்து சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -